கண்மூடித்தனமான வேகம்! யாழ்.சங்குப்பிட்டிப் பாலத்தில் ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூநகரி சங்குப்பிட்டிப் பாலத்தில் டிப்பர், மோட்டார் சைக்கிள் விபத்தில் புங்குடுதீவை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான தா.பிரசாத் (வயது-26) என்ற இளைஞனே உயிரிழந்தவர் ஆவார்.

கிளிநொச்சிக்கு வேலைக்குச் சென்று திரும்பி வரும் போது நேற்று இரவு 9.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகச் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இளைஞன் அவசர அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போதே உயிரிழந்துள்ளார்.


Previous Post Next Post