யாழில் இளைஞன் தப்பியோட்டம்! பெண்கள் மீது இராணுவம் தாக்குதல்!!

யாழ்ப்பணாத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.நாகர்கோவில் கிழக்கு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இராணுவத்தினர் இளைஞன் ஒருவனை கைது செய்ய முயற்சித்த நிலையில்இ குறித்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள், சிறுவா்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனார்.

ப.ஐங்கரன் என்ற இளைஞனை நாகர்கோவில் கிழக்கு கடற்கரையில் வைத்து கைது செய்ய இராணுவ புலனாய்வு பிாிவு முயற்சித்தபோது அவர் கடலில் குதித்து நீந்தி தப்பியுள்ளார்.

இதனையடுத்து கரையில் நின்றவர்கள் மீதும், தப்பி சென்ற இளைஞனின் சகோதரிகள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான இரு பெண்களில் ஒரு பெண் கர்ப்பிணி என கூறப்படுகிறது.  மேலும் சிறுவன் ஒருவன் மீதம் தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை தப்பிச் சென்ன இளைஞனின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்.

இராணுவ சீருடை மற்றும் சிவில் உடையில் ஆயுதங்களுடன் வந்தவர்கள் தாக்கியதாக அவர் கூறினார்.

இதேவேளைகடந்த தை பொங்கல் தினத்தன்று இதே பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் தர்க்கம் உருவாகியிந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post