யாழில் கொரோனா அச்சம்! இத்தாலியிலிருந்து வந்தவர்கள் சுற்றிவளைப்பு!! (படங்கள்)

இத்தாலியில் வசித்துவரும் குடும்பத்தினர் பருத்தித்துறை சுப்பர் மடத்தில் உள்ள தமது உறவினர்கள் வீட்டிற்கு வந்த நிலையில் அங்கு பொலிஸாரும் சுகாதார உத்தியோகத்தர்களும் விசாரணையை மேற்கொண்டனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபபரப்பு ஏற்பட்டிருந்தது.

உலகை உலுக்கி வரும் கொரோனோ நோய்த் தாக்கம் இலங்கையிலும் அதிகரித்து வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

அத்தோடு வெளிநாடகளிலில் இருந்து வருபவர்களுக்கே இந் நோயின் தாக்கம் அதிகளவில் இணங்காணப்பட்டுள்ளது. ஆகையினால் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் பருத்தித்துறையிலுள்ள வீடொன்றிற்கு அவர்களது உறவினர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்துள்ளனர். ஆயினும் அவர்களுக்கு கொரோனா தாக்கம் இருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்து பொலிஸாருக்கும் இரகசிய தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த வீட்டிற்கு வருகை தந்த பொலிஸாரும் சுகாதார உத்தியோகத்தர்களும் விசாரணைகைளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post