யாழில் விபத்து! பெண் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை குரும்பசிட்டி ஞான வைரவர் ஆலயத்திற்கு அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த பெண் டிப்பர் வாகனம் மோதியதிலேயே பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதில் புலோலி காந்தீயூர் பகுதியைச் சேர்ந்த ஜீவராஜா நிர்மலாவதி (வயது-43) என்ற பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதியை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post