யாழில் களமிறங்கிய சிறப்பு அதிரடிப் படை! கொரோனா ஒழிப்பு தீவிரம்!! (படங்கள்)

உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை இலங்கையில் இல்லாதொழிப்பதற்கு அரசாங்கத்தினாலும் சுகாதாரத்துறையினாலும் பலதரப்பட்ட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பணி மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முன்னேடுக்கப்படவுள்ளது.

சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரும் இந்தப் பணியின் ஆரம்பத்தில் பங்கேற்றிருந்தார்.

கோரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post