உள்நாட்டில் வெடிகுண்டு தயாரிப்பு! பருத்தித்துறையில் நால்வர் கைது!!

பூநகரியைச் சேர்ந்த நான்கு பேர் யாழ்.பருத்தித்துறைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டுத் தயாரிப்பு குண்டுகளுக்குப் பயன்படுத்தும் வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அண்மையில் வைத்து அவர்கள் நால்வரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இரகசியத் தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் முன்னெடுத்த தேடுதலில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து சி4 வெடிமருந்தின் வீரியத்துக்கும் குறைந்தளவான 856 கிராம் வெடிமருந்து மற்றும்இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நால்வரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post