இலங்கை இராணுவத்தின் செயற்பாடு! குவியும் பாராட்டுக்கள்!! (படங்கள்)

ஸ்ரீலங்காவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள சூழந்நிலையில் பொது மக்களிடையே பல்வேறு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை புதிய தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருவதுடன் ஏற்கனவே பல முகாம்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.

மேலும் பல முகாம்களை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இவ்வாறு புதிய தனிமைப்படுத்தப்படும் நிலையங்கள் அமைக்கும் பணியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் செயற்படும் விதம் புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் இக்கட்டாண சூழ்நிலையில் இரவு பகல் பாராது இராணுவ வீரர்களின் உழைப்பிற்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Previous Post Next Post