கடலில் மிதந்து வந்த சிவன் சிலை! மண்டைதீவு சிவன் ஆலயத்தில் வைக்கப்பட்டது!! (படங்கள்)

யாழ். மண்டைதீவு கிழக்கு, கண்ணகை அம்மன் ஆலய கடற்கரைப் பகுதியில் நேற்றைய தினம் சிவன் சிலை ஒன்று மிதந்து வந்திருந்தது.

இந் நிலையில் குறித்த சிலை இன்று காலை மண்டைதீவு தெற்குப் பகுதியில் அமைந்துள்ள தில்லேஸ்வரம் சிவன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அப் பகுதியில் உள்ள மக்களால் எடுத்து வரப்பட்ட  சிலை,  குறித்த ஆலயத்தில் வைத்துத் தற்போது வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
Previous Post Next Post