சற்றுமுன் யாழ்.மண்டைதீவு கடற்கரையில் மிதந்துவந்த சிவன் சிலை! (படங்கள்)

யாழ்ப்பாணம் தீவகம், மண்டைதீவுக் கடற்கரைப் பகுதியில் சிவன் சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

மண்டைதீவு கிழக்கு கண்ணகை அம்மன் ஆலய கடற் பகுதியில் கடலில் மிதந்து வந்த மேற்படி சிவன் சிலையை பிரதேசவாசிகள் மீட்டு, அப் பகுதியில் வைத்துள்ளனர்.

எமது இணையத்தளத்தில் வெளியாகிய குறித்த செய்தி தொடர்பில் சமூக ஊடகங்களில் பலவாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதாவது, இச் செய்தி பொய்யானதாகவும், சித்திரிக்கப்பட்டதாகவும் தெரிவித்து கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இச் செய்தி எமது இணையத்தளத்தினால் நன்கு உறுதிப்படுத்தப்பட்டு, நேரடியான தகவல்கள் பெறப்பட்ட பின்னரே பிரசுரிக்கப்பட்டது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

கடலில் மிதந்து வந்த குறித்த சிவன் சிலை அப் பகுதியிலுள்ள நபர் ஒருவரினால் மீட்கப்பட்டுத் தற்போது அவரின் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்ட நேரத்தில் மண்டைதீவுப் பகுதியில் உள்ள ஆலயங்கள் மூடப்பட்டுள்ளதால் குறித்த சிலையை ஆலயத்தில் வைப்பதற்கு முடியாதுள்ள நிலையிலும் ஆலய உரிமையாளர்களிடம் அனுமதி பெற முடியாத நிலையிலுமே வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக சிலையை மீட்ட நபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விரைவில் அப் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு ஆலயத்தில் சிலை ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.Previous Post Next Post