கொரோனா தொற்று அச்சத்தால் ஈழத்தமிழர் ஒருவர் பிரான்ஸில் நேற்று உயிரிழந்துள்ளார்.
பிரான்சில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத்தின் இளம் ஆசிரிய பயிற்றுநரான சிவராசா ஜெகன் (43) என்பவரே நேற்று (23) உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் சார்சல் பகுதியில் வசித்த இவருக்கு மூன்று நாள் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. கொரோனா தாக்கமாக இருக்குமோ என அவர் அச்சமடைந்திருக்கிறார். இந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென அவர் அச்சமடைந்ததால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான இவர் தமிழ்ச் சோலைப் பள்ளி ஆசிரியராவார்.
யாழ்.பல்கலை புவியியல் சிறப்புக்கலை பட்டதாரியான இவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்வித் திணைக்களத்திலும் பணியாற்றியுள்ளார்.