உயர்தரப் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை பரீட்சைகள் ஆணையாளர் நிராகரித்துள்ளார். அப்படியான எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவியவை போலிச் செய்திகள். அவற்றை நம்ப வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி.பூஜித கேட்டுக் கொண்டுள்ளார்.

திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதம் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் நடைபெறும். அதேபோல 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post