யாழ்.திருநெல்வேலிச் சந்தை வியாபாரிகளின் நீதியற்ற செயற்பாடுகள்! (வீடியோ)

இன்று மாலை 6 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

இந் நிலையில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் அதிகளவில் யாழ்.திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் திரண்டிருந்தனர்.

இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய திருநெல்வேலிச் சந்தை வியாபாரிகள் தங்களால் விற்பனை செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கான விலையினை பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்துள்ளனர்.

அந்தவகையில் காலையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 150 ரூபாயாகவும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் 150 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post