மூன்று மணியுடன் முடங்கியது யாழ்.நகரம்! (படங்கள்)

நேற்றைய தினம் வணிகர் கழக நிர்வாக சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இன்று பிற்பகல் 3 மணியுடன் அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டு யாழ்.நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

அத்தியாவசிய தேவையான உணவகங்கள், மருந்தகங்கள், பலசரக்கு வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களே இன்று பிற்பகல் 3 மணியுடன் மூடப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாண நகரம் சனநடமாட்டம் அற்ற ஒரு இடமாகக் காட்சியளிக்கின்றது.Previous Post Next Post