வேலணை பிரதேச சபையால் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுப்பு! (படங்கள்)

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அதனைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் பல தரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு ஆகிய பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி தொற்று நீக்கி விசுறும் பணி வேலணை பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் பணியினை சபையின் உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் ஊழியர்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். Previous Post Next Post