ஊரடங்குச் சட்டம் நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊடரங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில்,

கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.

அத்துடன் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் பின்னர் மதியம் 2 மணிமுதல் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இது போன்று ஏனைய மாவட்டங்களில் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுப் பின்னர் மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

இவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் காலப் பகுதிகளில் மதுபானசாலைகளை மூடுமாறும் அத்துடன் அத்தியாவசிய பொருட்களை அநாவசிமாக சேகரிக்க வேண்டாம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post