இலங்கையில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று! 214 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனாத் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.

ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 56 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வாரங்களில் தளர்த்துவதற்குச் சந்தர்ப்பம் உள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post