யாழில் விநாயகர் சனசமூக நிலையத்திற்கு விசமிகள் தீ வைப்பு!

யாழ்ப்பாணம் கைதடி விநாயகர் சனசமூக நிலையத்திற்கு விசமிகள் தீவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் சன சமூக நிலையத்தில் காணப்பட்ட தளபாட உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவான சொத்துக்கள் எரிந்தழிந்துள்ளன.

இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post Next Post