தீவகத்தில் குடிநீர் தேவைப்படுவோர் உடன் அழைக்கவும்! தொலைபேசி இலக்கம் வெளியீடு!!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு ஆகிய பகுதிகளில் குடிநீர்த் தேவை ஏற்பட்டால் உடனே அழைக்கவும் என்று சபை தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களுக்குக் குடிநீர் மிகவும் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு சபை செயற்பட்டு வருகின்றது.

புங்குடுதீவு உப அலுவலகப் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசக் குடிநீர் வழங்குவதற்குத் தயார் நிலையில் வேலணை பிரதேச சபையின் 16 ஆயிரம் லீற்றர் கொள்ளளவுடைய இரண்டு நீர்த் தாங்கிகள் மூலமாக இலவச குடிநீர் வழங்கப்படவுள்ளன.

புங்குடுதீவு உப அலுவலகப் பொறுப்பதிகாரியால் குடிநீர் தேவைப்பாடுடைய இடங்கள் இனங்காணப்பட்டு செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக செயலாளரின் அனுமதியோடு குடிநீர் விநியோகம் இடம்பெறுகின்றது.

புங்குடுதீவு உப அலுவலகம் மட்டுமன்றி நயினாதீவு உப அலுவலகப் பகுதியிலும் வழமையான குடிநீர் விநியோகம் வேலணை பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புங்குடுதீவு மற்றும் ஏனைய உப அலுவலகப் பகுதிகளில் குடிநீர் பெறுவதில் ஏதும் இடர்பாடுகள் காணப்படின் அலுவலக நாட்களில் வேலணை பிரதேச சபை தொடர்பு இலக்கமான 021 221 1506 / 021 221 1505 ஆகிய இலக்கங்களுடன், அலுவலக நாட்கள் தவிர்ந்த ஏனைய விடுமுறை நாட்களில் 077 806 5444 எனும் இலக்கம் ஊடாகவும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு குடிநீர் பெறுவதில் உள்ள சிரமத்தை நிவர்த்தி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






Previous Post Next Post