யாழ். மறை மாவட்டத்தின் பரிசுத்தவார வழிபாடுகள் நேரலையில் ஒளிபரப்பு

நாட்டின் தற்போதைய சூழலில் மக்கள் ஒன்றுகூடமுடியாமை மற்றும் ஊரடங்கு காரணமாக இம்முறை பரிசுத்த வார, ஈஸ்டர் வழிபாடுகள் யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளன.

இந்த வழிபாடுகளில் ஆயர் இல்லத்தில் வசிக்கும் குருக்கள் மட்டும் இடம்பெறுகின்றன என்று அருட்தந்தை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ப. யோ. ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இவ்வழிபாடுகளில் இறைமக்கள் பங்குபற்றும் முகமாக டான் தொலைக்காட்சி, கப்பிற்றல் தொலைக்காட்சி, பகலவன் இணையத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு முகநூல் பக்கம் ஆகியவை நேரலையாக ஒளிபரப்புச் செய்ய இருக்கின்றன.

இந்நேரலை ஒளிபரப்புக்களை பின்வரும் நேரங்களில் காணலாம்.
  • ஏப்ரல் 9 – பெரிய வியாழன் – மாலை 4.30 மணி. 
  • ஏப்ரல் 10 – பெரிய வெள்ளி – மாலை 4.30 மணி 
  • ஏப்ரல் 11 – பெரிய சனி பாஸ்கா திருவிழிப்பு – இரவு 7 மணி 
  • ஏப்ரல் 12 – உயிர்ப்பு ஞாயிறு – காலை 7.30 மணி
Previous Post Next Post