பிரான்ஸ் உறவுகளால் அல்லைப்பிட்டி மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு! (படங்கள்)

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் உறவுகளால் அல்லைப்பிட்டிப் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியில் அரிசி, மா, சீனி, பருப்பு, மிளகாய் தூள் உள்ளடங்களாக  ஒரு குடும்பத்துக்கு ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதி கொண்ட உணவுப் பொதி வழங்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு, அல்லைப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக அவர்களின் ஆறு பிள்ளைகளின் நிதியுதவியுடன் இப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி முதலாம், இராண்டாம், மூன்றாம் வட்டாரப் பகுதியில் வசிக்கும் வறுமைக் கோட்டுக் கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் நாளாந்தத் தொழில் செய்து வந்து வருமானம் இழந்த குடும்பங்கள் கிராம அலுவலரின் வழிகாட்டலின் கீழ் தெரிவு செய்யப்பட்டே குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் மற்றும் நாளாந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான புலம்பெயர் உறவுகளின் உதவிகள் போற்றுதலுக்குரியவையே. 




Previous Post Next Post