கொரோனாவின் பாதிப்பை உணராதுவிடின்… மரண வலியை உணர வேண்டிவரும்!

சுவிட்சலாந்தில் உள்ள மருத்துவமனையில், கொரோனோ தொற்றுப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தரான வினோதா ஜெயமோகன் கொரோனோ தொற்றுச் சம்பந்தமாக எப்படியான அறிகுறிகள் ஏற்படும், கொறோனா வைரஸ் உடலங்களை தாக்கும் முறைமைகள் மற்றும், கொறோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பன பற்றிய விளக்கத்தை வழங்கியுள்ளார்.

கொரோனோ என்பது வைரஸின் ஒருவகை. இது கிட்டத்தட்ட 1957 ம் ஆண்டுகளிலேயே இனம் காணப்பட்டது. இந்த கொரோன வைரஸ்கள் தங்களுக்குள் தாம் பலவேறுபட்ட பிரிவுகளையுடையது . இவற்றின் தாக்கம் பிரிவுகளுக்கு ஏற்ப வேறுபடும்.

அந்த வகைகளில் ஒன்றே கொரோனோ 19 என்கின்ற சீனாவில் உற்பத்தியாகி உலகையே நெருக்கடிக்கு உள்ளாக்கி வருத்தும், இந்த கொரோனா 19 ஆகும்.

தமிழர்களில் பண்பாடுகளில் அன்று, ஏதாவது பாரிய நோய்கள் ஏறபட்டால் தெய்வக் குற்றம் ஊரைவிட்டு விலக்கி வைக்கும் மரபு காலாதிகாலமாகவே பேணப்பட்டு வந்தது . இதுவே இன்று உலக சுகாதார நிறுவனம் stay home  என்கின்றது .

இந்த தொற்று மனிநடமாட்டங்கள், சனநெரிசல்களின் போது ஒருவரில் இருந்து காற்றின் மூலமாக பரவக்கூடியது. இந்த பரவலை தடுப்பதாயின் மக்களின் பெயர்வுகள் தடுக்கப்படவேண்டியது பிரதானமானது. அதனையே தற்போது உலகநாடுகள் கடைப்பிடிக்கின்றன.

பல்வேறு உலகநாடுகள் இவற்றில் வெற்றிகண்டாலும் சில பிரசித்திபெற்ற நகரங்களில் இவற்றை தடுப்பது சிரமாக உள்ளது. அதனாலேயே அந்த இடங்களில் பரவும் அளவும் மரணத்தின் அளவும் கட்டுப்பாடின்றி வளர்ந்து செல்கின்றது.

இவ்வாறு கொரோனோ19 தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு ஆரம்ப நிலையில் தொண்டையில் சரசரப்பு, இருமல், காய்சல் )39 பாகை செல்சியஸ்க்கு மேல்), உடல்நோ போன்ற அறிகுறிகள் காணப்படும் . இது கொரோனோ தொற்றின் ஆரம்ப நிலை. இவ்வாறான நிலைமையில் கொரோனோ தொற்றுப் பரிசோதனை அவசியமாகிறது.

மூக்குவழியாக தொண்டைக்குழியில், பரிசோதனைக்குரிய திரவத்தனை பெறப்பட்டு அவை ஆய்வுகூடத்திற்க்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆய்வுகூட அறிக்கையின் பிரகாரம் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.

சிலவேளைகளில் முதலாவது பரிசோதனையில் தொற்று இனம் காணப்படாமல் இரண்டாவது பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு.

மேற்குறித்த முதலாம் படிநிலையில், நோயாளி அவரின் வயது, அவருக்குள்ள ஏனைய நோய்களின் தன்மை என்பவற்றின் அடிப்படையில் சிகிச்சை திட்டமிடப்படுகிறது.

ஆரோக்கியமான ஒரு இளவயதினருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் இ அவர் சுய தனிமைப்படுத்தலோடு, தேசிக்காய், இஞ்சி, மஞ்சள்மா, கறுவா இவை கலந்த நீரை கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளைகள் ஆவி பிடித்தல் மூலம்தொண்டைப்பகுதியில் உள்ள சளிந்தன்மையை குறைக்கலாம்.

சுவாசக்குழாய்களை, இலகுவான சுவாசத்திற்கேற்ப மூக்கையும் தயார்ப்படுத்த உதவும் . அத்தோடு 15 நிமிடத்திற்க்கு ஒருதடவை சுடுள்ள தேனீரை அடிக்கடி அருந்தவேண்டும். உடலின் நீரிழப்பு ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த நேரத்தில் சோம்பல், உடற்சோர்வு என்பன அதிகளவில் ஏற்படும் . அவற்றை மனதிடகாத்திரத்தால் எதிர்த்து வைத்தியரால் சிபாரிசு செய்யப்பட்ட மாத்திரைகள், உணவு என்பவற்றையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த ஆரம்பநிலையில் கவனம் செலுத்தாத கொரோனோ நோயாளிகள் இரண்டாம் படிநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தொண்டையில் ஏற்பட்ட தொற்று, தொண்டையில் உள்ள மூச்சுக்குழல் மூலமாக இ ஙரையிரலைத் தாக்கிறது. இதன்மூலம் நுரையிரல் மற்றும் மூச்சுக்குழாய்கள் பாரிய தொற்றுக்குள்ளாகின்றன. இந்த நிலைமை ஏற்படும் போது நோயாளி அவசரவசியமாக வைத்தியசாலையில் சேர்க்கப்படவேண்டும்.

நோயாளிக்கு மூச்சு எடுப்பதில் சிரம்ம், நெஞ்சு நோ, பல்வேறு உடலுபாதைகள் ஏற்படுகின்றன. நுரையீரலில் திரவத்தன்மை சேருகின்றது . இதனால் சாதாரணமாக ஓ-சுயல படத்தில் கறுப்பு நிறந்தில் உள்ள நுரையீரலானது வெள்ளைநிறமாக தோற்றமளிக்கிறது. இந்நிலையினாது நுரையீரலின் பாதிப்பின் பாரதூரத்தினை உணர்ந்துகின்றது.

இந்த பாதிப்பின் தன்மைக்கேற்ப நோயாளாளி சாதாரண கொரோனோ வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை அளிக்கப்படவேண்டியவரா ? அல்லது அவரசிகிச்சைப்பிரிவின் இயந்திரத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படவேண்டியவரா என்பதனை தீர்மானிக்கிறது.

இவ்வாறான நிலைமைகளிலும் கூட நோயாளிகளோ அவர்களது உறவினர்களோ கவனமற்று இருப்பார்களே ஆயின் தொடர்ந்து சிறுநீரகம் மற்றும் இதயம் என்பன பாதிக்கப்பட்டு மரணம் சம்பவக்கின்றது.

இதனாலேயே நீரிழிவு நோயாளர்கள் மற்றும் இருதயநோயாளிகள் அதீத கவனத்திற்க்கு உட்பட்டவர்கள் என சுகாத நிறுவனம் அறிக்கையிட்டது.

எனவே நாம் கொரோனோ தொற்றிலிருந்து எம்மை நாமும் இ எம்மிடமிருந்து மற்றவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு கூட்டுறவோடு செயறபடவேண்டிய நேரமிது. இதன் மூலமே இதனை இல்லாதொழிக்கலாம்.

அவரவர் வீடுகளில் மரணங்கள் சம்பவிக்கும் போதுதான் நம்மில் சிலர் மரணம் எப்படிக் கொடியது என்பதனை உணர்கிறார்கள். ஒருவருடைய மரணம் அவரின் குடும்ப அங்கத்தவர்களை எவ்வாறு பாதிப்படைய செயகின்றது.

குழந்தைகள், மனைவி அல்லது கணவன் என்கின்ற கட்டுமான சிதைவும், அதன் வலியும், எதனாலும் ஈடுசெய்ய முடியாது என்பதனை உணர்ந்து நாம் அனைவரும் தொற்றிலிருந்து விலகி பாதுகாப்பாக உயிர்வாழ்வோமாக.

வினோதா ஜெயமோகன் 
கொரோனோ தொற்றுப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்- சுவிஸ்.
Previous Post Next Post