இலங்கையில் பாடசாலைகள் திறப்பது தொடர்பில் தற்போது வந்த தகவல்!

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன. இதன்போது ஏப்ரல் 20 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.

என்ற போதும் நாட்டில் தற்போது உள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளை திறக்கும் திகதி மே மாதம் 11ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா நோய் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டே பாடசாலைகளை திறப்பது பற்றி தீர்மானிக்கப்படும். பாடசாலைகளை திறப்பது தொடர்பில் சுகாதாரத் துறையினரின் பூரண அனுமதியுடன் தீர்மானங்கள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post