யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் திடீர் மரணம்!

தென்னிலங்கையில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பினை வைத்திருந்தார்கள் என்று சந்தேகத்தில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் மாரடைப்பால் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் விடத்தற்பளை பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த ஐவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் ஐவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் நால்வரிடம் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் மற்றைய ஒருவர் உடல் நிலை மோசமாக காணப்பட்டமையால் அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் கடந்த இரவு மாரடைப்பினால் அவர் உயிரிழந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post