யாழில் உயிரிழந்த முதியவரின் இறப்புக்கான காரணம் வெளியானது! (வீடியோ)

உணவு வழங்கப்பட்ட போது...
யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயப் பகுதியில் உண்பதற்கு உணவின்றி யாசகம் செய்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் நேற்று சனிக்கிழமை வெளியாகியிருந்தது.

உயிரிழந்த குறித்த முதியவா் உணவின்றி உயிரிழக்கவில்லை எனவும் அவருக்கு ஏற்கனவே இருந்த ஆஸ்துமா நோய் காரணமாகவே உயிரிழந்தாகவும் அவருடன் இருந்த முனியப்பர் ஆலயத்தின் காவலாளி தெரிவித்துள்ளாா்.
உயிரிழந்தவர் வவுனியா நெளுக்குளத்தை சேரந்த பேதுருப்பிள்ளை அல்பிரட் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன் அன்றை நாள் காலை பால்க்கஞ்சி சாப்பிட்டுள்ளார் எனவும் மதியம் இரண்டு மணியளவில் கோவிலில் பணிபுரியும் தெய்வம் என்பவர் சாப்பாட்டுக்கு வரவில்லை என்று பார்க்கும் போதே அவர் உயிரிழந்த விடயம் தெரிய வந்தது எனவும் ஆலயத்தில் பணியாற்றும் நபர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சனின் ஏற்பாட்டில் முனியப்பர் கோவிலடியில் உள்ள அனைவருக்கும் யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் ஹோட்டல்கள் இரண்டினால் சுழற்சி முறையில் இலவச உணவு கடந்த 20 நாள்களாக வழங்கப்பட்டு வந்தது” என்று பிரிவுக்குப் பொறுப்பான கிராம சேவையாளரால் உறுதிப்படுத்தப்பட்டது.
Previous Post Next Post