அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை! ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களுக்கு இல்லை!!

‘ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மட்டுமே தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு அனுமதியளிக்கப்படும்.

ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை” இவ்வாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றிரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மக்களின் தேவையற்ற ஒன்றுகூடலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் போது மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் (ஐடி) இறுதி எண் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்போது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு இது எந்த வகையிலும் பொருந்தாது. ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமம் ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்டால், அத்தகைய பகுதிகளுக்குள் நுழையவோ வெளியேறவோ யாரும் அனுமதிக்கப்படுவதில்லை – என்றுள்ளது.
Previous Post Next Post