பிரான்ஸில் பொதுப் போக்குவரத்துக்கான கைபேசிப் படிவம் வெளியாகியது!

கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என சிவப்பு பிராந்தியமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான இல்-டு-பிரான்ஸ் பொதுப்போக்குவரத்துக்களில் குறித்த நேரங்களில் (ATTESTATION DÉROGATOIRE USAGE DES TRANSPORTS PUBLICS COLLECTIFS EN ILE-DE-FRANCE DE 6H30 À 9H30 ET DE 16H00 À 19H00)பயணிப்பதற்கான கைபேசி படிவம் வெளியிடப்பட்டுள்ளது.


சனநெரிசல் நிறைந்த நெருக்கடியான நேரம் என வர்ணிக்கப்படுகின்ற இந்நேரத்தில் வைரஸ் தொற்று பரவாதிருக்க அத்தியாவசிய தேவைகள் தவிர பிற தேவைகள் தடை செய்யப்பட்டள்ளது.

இந்நிலையில் குறித்த நேரங்களில் பயணம் செய்வதனை இலகுபடுத்த கைபேசி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, அத்தியாவிசிய காரணங்களுக்கான அத்தாட்சி பத்திரங்கள் கையுடன் கொண்டு செல்ல வேண்டும் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
Previous Post Next Post