யாழில் பொலிஸார் அதிரடி! 26 ரவுடிகள் கூண்டோடு கைது!!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு ரௌடிக் குழுவின் தலைவன் ஒருவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஒன்றுகூடிய 26 இளைஞர்கள் இன்று மருதனார் மடத்தில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தின் பிரபல ரௌடியான வாள்வெட்டுக் குழுவொன்றின் தலைவன் ஒருவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, மருதனார்மடத்தில் கேக் வெட்டுவதற்காக ரௌடிகள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மருதனார்மடம் பகுதியில் வைத்து 26 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதிலுள்ள ரௌடிகளை அடையாளம் காணும் பணிகள் நடப்பதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்