யாழில் வீதியில் சென்ற பெண்களுடன் தவறாக நடந்த 4 இளைஞர்களுக்கு நடந்த கதி!

யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முயற்சித்ததாகக் கூறப்படும் நான்கு இளைஞர்கள் மீது ஊரவர்கள் தாக்குதல் மேற்கொண்ட நிலையில், நால்வரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படட்டுள்ளனர்.

யாழ். கொக்குவில், கலட்டி பகுதியில் மாலை நேரங்களில் ஒன்று கூடும் இளைஞர் கூட்டம் ஒன்று, அவ்வீதி வழியாக தனிமையில் செல்லும் பெண்களுடன் தகாத முறையில் நடக்க முயற்சிப்பதுடன் சேட்டை புரிந்து வந்துள்ளனர்.

இளைஞர்களின் இந்தச் செயலை ஊரவர்கள் நீண்ட நாட்களாக அவதானித்து வந்த நிலையில், இது தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என ஊர் மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை வழமை போன்று அப்பகுதியில் கூடிய இளைஞர் கூட்டம் பெண்களுடன் சேட்டை புரிந்தபோது, ஊரவர்கள் ஒன்று கூடி இளைஞர் கூட்டத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் நான்கு இளைஞர்களும் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post