யாழில் திடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ரயில் பாதைகளை சீரமைத்து சுத்தப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய யாழ்ப்பாணத்தின் ரயில்ப் பாதைகளும் தனியார் ஒப்பந்ததாரர்களால் சீரமைக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறான நடவடிக்கை நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சற்று முன்னர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த 37 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான றெஜினோல்ட் என தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பாக பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்