யாழில் எலிக்காய்ச்சலால் இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் இன்று உயிரிழந்த நிலையில் அவருடைய மரணம் எலிக்காய்ச்சல் நோயினால் ஏற்பட்டதா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு காணப்பட்ட நோய் அறிகுறிகள் எலிக்காய்ச்சல் நோய்க்குரிய அறிகுறிகளுடன் ஒத்துக் காணப்பட்டதால் குறித்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வண்ணார்பண்ணையைச் சேர்ந்த திருமதி லிங்கேஸ்வரி சதீஸ்குமார் (வயது 40) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே மரணமடைந்தவராவார்.
Previous Post Next Post