பிரான்சில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

கொரோனா வைரஸ் காலத்தில் வருமானம் மிகவும் குறைந்த நிலையில் உள்ள மிகவும் பலவீனமான (fragiles) வங்கிக்கணக்குகளுக்கு, உடனயானதும் நீண்ட காலத்திற்கமான நடவடிக்கை ஒன்றைப் பிரான்சின் பொருளாதாரம் மற்றும் நிதிக்கான அமைச்சர் புரூனோ லு மேர் (Bruno Le Maire) அறிவித்துள்ளார்.

வழமையாகக் கட்டப்படவேண்டிய Prélèvementகளுக்கு, வங்கியில் பணம் இல்லாவிட்டால், அதற்கான அபராதப் பணத்தை (frais d'incidents bancaires) வங்கிகள் விதிக்கும்.

சில வங்கிகள் மாதத்திற்கு 80€ இருந்து 100€ வரை கூட இந்த அபராதத்தை விதித்து வந்துள்ளது. இதனை நிதியமைச்சரின் அறிக்கை தடைசெய்துள்ளதுடன், வங்கிக் கணக்குகளுக்கான கட்டணங்களையும் கட்டுப்படுத்தி உள்ளது.

ஜுலை மாத ஆரம்பம் முதலே இந்தக் கட்டுப்பாடுகள் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், வங்கிகளை Banque de France மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கும் எனவும் புரூனோ லு மேர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post