பிரான்ஸின் கோடைக் கால விடுமுறை! இரண்டாம் கட்டத் தொற்றுக்கு தயாராகும் கொரோனா!

கோடைகால விடுமுறை ஆரம்பமாகி விட்டது. விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றலாத்துறையை ஊக்குவிற்பதற்காக அரசாங்கம் மிகவும் அலட்சியத்துடன் நடந்து கொள்கின்றது.

கொரோனா வைரஸ் என்பது ஒரு பிரயாண வைரஸ். பயணிக்கும் வைரஸ். இதன் மூலம் மீண்டும் கோடை காலத்தில் பிரான்சில் இரண்டாவது பாரிய கொரேனாத் தொற்றலை ஏற்படும் ஆபத்து உள்ளது என கொரோனாத் தொற்றுக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளிற்குச் சிகிச்சையளித்த, பரிசின் முக்கிய அரச வைத்தியசாலையான Pitié-Salpêtrière இன்இ தொற்றியல் துறையின் தலைமை வைத்தியரும் ஆராய்ச்சியாளருமானProfesseur Eric Caumes எச்சரித்துள்ளார்.


ஏற்கனவே மொரோக்கோ போத்துக்கல்லின் லிஸ்பொன் நகரம், பிரித்தானியாவின் Leicester மற்றும் ஜேர்மனியின் பல நகரங்கள் இரண்டாவது தொற்றலையினால் மீண்டும் உள்ளிருப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இவற்றையெல்லாம் விட மிகமோசமான தொற்று பிரான்சில் ஏற்படும் அபாயம் உள்ளது. பிரான்ஸ் தனது சுகாதாரக் கலாச்சாரத்தைத் தொலைத்துப் பதினைந்து வருடங்களிற்கு மேலாகின்றது எனவும்  Professeur  Eric Caumes  தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post