யாழ்.வேலணையில் கொரோனா தொற்று அபாயம்! ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டார்!!

தமிழகத்தில் இருந்து படகு ஒன்றின் ஊடாக இன்று யாழ்ப்பாணம் தீவகம் வேலணைக்கு வந்திறங்கிய ஒருவா் அப்பகுதி மக்களின் முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அங்கிருந்து தப்பி வந்தவரால் வேலணையில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதி மக்ககள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை ஊா்காவற்றுறை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனா்.

தொடா்ந்து அங்கு வந்த சுகாதார அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து தப்பி வந்த நபரை தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகின்றனா்.

வேலணை 2 ஆம் வட்டாரத்தைச் 29 வயதான ஒருவரே விசாரணைகளின் பின்னா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தீவிகப் பகுதிகள் தமிழகத்தில் இருந்து மிக அண்மையில் இருப்பதால் இங்கு மேலும் பலா் தப்பி வரக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தப்பிவரும் நபா்கள் தனிமைப்படுத்தப்படாமல் இரகசியமாக சமூகத்தில் நடமாடினால் கொரோனா தொற்று நோய் பரவக்கூடிய ஆபத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோமாக வருபவா்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தீவகப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதேவேளை இவ்வாறு தமிழகத்தில் இருந்து தப்பி வரக்கூடியவா்களால் ஏற்படக் கூடிய ஆபத்துக் குறித்து ஏற்கனவே வட பிராந்திய சுகாதாரப் பிரிவினா் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post