யாழில் மாணவி உட்பட இருவர் தூக்கிட்டுத் தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் நேற்று இரு வேறு இடங்களில் மாணவி உட்பட இருவா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனா்.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று காலை அவரது அறையில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி - மடத்தடி வீதி சங்கத்தானையைச் சேர்ந்த 25வயதான ராசேந்திரம் நிரூஜன் என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தாயார் சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போதே இவ்வாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.

யாழில் நடு வீதியில் கணவன் அட்டகாசம்! மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!! – நடந்தது என்ன?

இதேவேளை யாழ்ப்பாணத்தில் மாணவியொருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த ஜெயதீபன் சிவப்பிரியா (19) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டார். அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்ததாக தெரிய வந்தது.

இவர் கடந்த ஒரு வருடத்தின் முன்னர் திருமணம் செய்த பின்னர் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகி வந்தார். இந்த நிலையிலேயே நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்விரு உயிரிழப்புக்கள் தொடா்பில் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
Previous Post Next Post