முச்சக்கரவண்டி – ரயில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற புகையிரதம் முச்சக்கர வண்டி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் .

இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 9.15 மணியளவில் மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் செட்டிகுளம் துடரிகுளம் வீதி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டியுடன் மோதிய விபத்துக்குள்ளானது.


இதில் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதியான முதலியாா்குளம் பகுதியைச் சோ்ந்த சகீது மௌலவி (வயது 55)  என்பவா் உயிரிழந்துள்ளார் .

இவ்விபத்தில் 500 மீற்றர் தூரத்திற்கு முச்சக்கரவண்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் சாரதியின் உடல் 150 மீற்றருக்கு அப்பால் துாக்கி வீசப்பட்டுள்ளதாக இவ்விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக விசாரணைகளுக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது .

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
Previous Post Next Post