துவிச்சக்கர வண்டியை மோதியது அரச பேருந்து! முதியவர் உயிரிழப்பு!!

கிளிநொச்சி ஏ - 09 நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனிறி சற்று முன்னர் உயிரிழந்திருப்பதாக கிளிநொச்சி பொது வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் மிதிவண்டியில் பயணித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்டபோது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து மோதியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் அவர் உயிரிழந்துள்ளார். அவருடைய உடைமைகளில் ஆள் அடையாள அட்டைகள் எதுவும் இல்லாத நிலையில் அவருடைய விபரத்தினைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

அவருடைய வயது அறுபது தொடக்கம் 65 இற்கு இடைப்பட்ட வயதை உடையவராக இருக்கலாம் என்று அண்ணளவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த முதியவரை அடையாளம் காணும் நடவடிக்கையில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனா்.
Previous Post Next Post