பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முக்கிய அறிவித்தல்!

பிரான்ஸ், பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகம் பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா உலகளவில் விரைவாகப் பரவுவதன் தற்போதைய சூழ்நிலைகளின் காரணமாகவும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு வருகை தரும் இலங்கையர்களிடையே வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் வெளியுறவு அமைச்சகம் மார்ச் 16 ஆம் திகதி முதல் மறுஅறிவித்தல் வரை வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தூதரக சேவைகளை வழங்குவதை மட்டுப்படுத்த முடிவு செய்தது.

பிரான்ஸ் அரசின் அதிகாரபூர்வ மூன்றாம் கட்டம் முடக்க நிலையைத் தளர்த்துவதற்கான அறிவுறுத்தலுக்கு இணங்கவும் மற்றும் தற்போதுள்ள சுகாதார அவசர நிலைக்கும் இணங்க பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கொன்சுலர் பிரிவு யூலை மாதத்தில் ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்படும்.

கண்டிப்பாகச் சந்திப்பு நியமனம் அடிப்படையில் தூதரகத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தியோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமாகவோ முற்கூட்டிய சந்திப்பு நியமனங்களைப் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் சேவையின் தன்மையைப் பொறுத்து சந்திப்பு நியமனங்கள் வழங்கப்படும்.

அலுவலக நேரம் முற்பகல் 9 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை


பொதுத் தொலைபேசி இலக்கங்கள்:- +33 1 55 73 31 31 / +33 6 77 04 81 17
அவசர கொன்சுலர் விடயங்களுக்கு:- +33 6 20 97 70 90

முற்கூட்டிய சந்திப்பு நியமனங்களைப் பெறுவதற்குத் தூதரக சேவைகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்களைப் பெறுவதற்கும் தயவுசெய்து செய்து மேலே உள்ள கையடக்கத் தொலைபேசி எண்களை அழைக்கவும் அல்லது எஸ்.எம்.எஸ். செய்யவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Previous Post Next Post