
இந் நிலையில் யாழ்ப்பாணத்தில் வில்லூன்றுப் பிள்ளையார் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் மற்றும் வேலணை சாட்டி கடற்கரைப் பகுதிகளில் இவ் விரத நிகழ்வுகள் பெரும்பாலும் இடம்பெறும்.
அந்தவகையில் வேலணை சாட்டிக் கடற்கரையில், வங்களாவடி முருகன் தீர்த்தமாடிச் சென்ற பிற்பாடு அங்கு ஆடி அமாவாசை விரத நிகழ்வுகள் இடம்பெற்றன.