யாழில் யுவதி குளிப்பதை எட்டிப் பார்த்த நபா் நையப்புடைப்பு!

யாழில் யுவதியொருவர் குளிக்கும் போது இரகசியமாக எட்டிப் பாா்த்த நபா் ஒருவா் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் யாழ்.கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யுவதியொருவர் வீட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, வளவிற்குள் அத்துமீறி நுழைந்த குறித்த நபா், குளியலறைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்துள்ளாா். இதனை அவதானித்த  யுவதியின் தாயார், அந் நபரை எட்டிப் பிடித்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அயலவர்கள் கூடி நபரை மடக்கிப் பிடித்தனர்.

அருகிலுள்ள திடலில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களும் அங்கு கூடி, குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். இதனால் அந் நபா் மயக்கமடைந்துள்ளார். பின்னர் பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். 40 வயதான பிரதேசவாசியொருவரே இவ்வாறு நையப்புடைக்கப்பட்டவராவாா்.
Previous Post Next Post