பிரான்ஸில் மாஸ்க் அணியச் சொன்ன பஸ் சாரதிக்கு நடந்த துயரம்!

பிரான்சில் மாஸ்க் அணிய மறுத்த பயணிகளால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் பேருந்து சாரதி ஒருவர் மூளைச்சாவடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பயோன் நகரிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு பயோனில் ஒரு பேருந்து சாரதிஇ பயணச்சீட்டு இல்லாமலும் மாஸ்க் அணியாமலும் பேருந்தில் ஏற முயன்ற பல பயணிகளை அனுமதிக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் 50 வயது கடந்த அந்த சாரதியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்களன்று மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதனிடையே பொதுமக்களின் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாரதிகள் வேலை செய்ய மறுத்ததால் பிராந்திய பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை அடுத்து பயோன் பகுதியில் மாஸ்க் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post