சம்பந்தன், சுமந்திரன், சிறிதரனை வெளியேற்றுகிறது தமிழரசுக் கட்சி?

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொடராக ஏற்பட்டுள்ள தலைமை மற்றும் தேசியப் பட்டியல் விவகாரத்தினால் தமிழரசுக்கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளதாகவும் அதன் தொடராக மிக முக்கியமான தீர்மானங்களை முன்னெடுக்க தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்களும் செயற்குழுவும் தீர்மானித்திருப்பதாகவும் நம்பகரமாக தெரியவந்துள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,


தேசியப்பட்டியலில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை நியமிப்பதற்கு தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்ற சூழலில் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கலையரசனை நியமிக்க சுமந்திரன், சிறீதரன் உட்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது உட்பட்ட அண்மைய சம்பவங்களின் அதிருப்தி நிலையின் தொடராக யாழ்ப்பாணத்தில் இது தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடராக அவசரமாக இன்று யாழ்ப்பாணத்தில் கூடுகின்ற தமிழரசுக்கட்சியினர் நாளை மத்திய குழுவை கூட்டி இரா.சம்பந்தன், சுமந்திரன், சிறீதரன், கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோரை தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைக்குத் தயாராகியிருப்பதாக பெயர் குறிப்பிடவிரும்பாத தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.


இதனிடையே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்துவதற்கு தமிழரசுக்கட்சியின் குழு ஒன்று இன்று நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.

அதேபோல தமிழ் தேசியக் கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தாவுடனும் பேச்சு நடத்த தமிழரசுகட்சியின் இளையவர்கள் தயாராகியிருப்பதாகவும் இன்று குறித்த சந்திப்பு இடம்பெற்றும் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழரசுக்கட்சியின் தலைமை மாற்றம் தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் நேற்று கிளிநொச்சி ஊடகவியலாளர் சந்தப்பில் சிவஞானம் சிறீதரன் அனைவரும் சேர்ந்து தன்னிடம் தலைமையை தந்தால் ஏற்று நடத்த தயார் என்று தெரிவித்திருந்தமையும் தமிழரசுகட்சியின் மூத்த தலைவர்களின் நடவடிக்கைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
Previous Post Next Post