
யாழிலிருந்து சென்ற எம்.ஏ.சுமந்திரன், மற்றும் சிறிதரன் ஆகியோர் இரா.சம்பந்தனுடன் இணைந்து, தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறையின் கலையரசனிற்கு வழங்கினர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் கருத்து பெறாமல், தமிழ் அரசு கட்சியின் ஏகோபித்த விருப்பத்தை புறம்தள்ளி, வழக்கம் போல- இரா.சம்பந்தன், சுமந்திரன் கூட்டு, இம்முறை சிறிதரனையும் இணைத்து இந்த இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
யாழிலிருந்து நேற்று திருகோணமலைக்கு சென்ற எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர், செயலாளர் துரைராசிங்கத்தையும் மட்டக்களப்பிலிருந்து அழைத்து, இந்த இரகசிய நகர்வை மேற்கொண்டனர்.
ஏற்கனவே இரா.சம்பந்தன்-சுமந்திரன் அணியின் தன்னிச்சையான நடடிக்கைகளால் தமிழ் தேசிய அரசியல் பெருவீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், புதிதாக சிறிதரனையும் இணைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சதி நடவடிக்கையால் இலங்கை தமிழ் அரசு கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.