சர்வதேச பொலிஸாரின் இரகசியத் தகவலால் புதுக்குடியிருப்பில் ஆணும் பெண்ணும் கைது?


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆண் ஒருவரும் இரணைப்பாலையைச் சேரந்த பெண் ஒருவரும் கொழும்பிலிருந்து வந்த விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் புத்தக சாலை ஒன்றை நடத்திவருகின்ற நபரும் இரணைப்பாலையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுமே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சர்வதேச பொலிஸார் (இன்ரர்போல்) வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆணுக்கு 35 இலட்சம் ரூபாய் பணமும் அந்தப் பெண்ணுக்கு 10 இலட்சம் ரூபாய் பணமும் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்தப் பணங்கள் தவறான வழியில் வெளிநாடுகளில் உள்ளவர்களால் சேகரிக்கப்பட்டதாகவும் சர்வதேச பொலிஸார் இலங்கை அரச தரப்புக்கு அறிவித்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக புதுக்குடியிருப்புத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் சம்பவம் தொடர்பிலான உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை..
Previous Post Next Post