சிவப்பு மாவட்டமாக பரிஸ்! திங்கள் முதல் மீண்டும் உள்ளிருப்பு? (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரேனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கடுமையாக எதிர்கொண்ட பிரான்ஸில் தற்போது இரண்டாம் அலை தாக்கி வருகின்றது. இதனால் பிரான்ஸ் அரசு தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்துள்ளது.

முகக் கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சமூக இடைவெளி பேணாமல் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவதைப் பொலிஸார் கண்காணித்து தடை செய்து வருகின்றனர்.

இந் நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பரிஸ் நகரம் சிவப்பு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் உள்ளிருப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்புக்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post