பிரான்சில் கொரோனத் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, (02/08/2020 - 03/08/2020) வரையான காலப்பகுதியில் 3400 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.இது ஆபத்தின் அறிகுறியைக் காட்டி நிற்கும் நிலையில், பிரான்சின் வைத்தியசாலைகளில், முக்கியமாகப் பாரிஸ் மற்றும் Île-de-France ஏனைய மாவட்டங்களிலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வைத்தியசாலைகளில் 29 பேர் மரணமடைந்துள்ளனர்
தொற்று ஆரம்பத்திலிருந்து பிரான்சின் மொத்தச் மரணங்கள் 30.294
வைத்தியசாலையில் மொத்த மரணங்கள் 19 779
வயோதிப இல்லங்களின் மரண எண்ணிக்கைகள் 10.541, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 5.198,
உயிராபத்தான நிலையில் COVID-19 அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 384
82.116 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.