பிரான்ஸில் மர்ம நீரூற்று! மூவர் உயிரிழப்பு!! அவிழாத முடிச்சுகள்!!! (வீடியோ)

பிரான்ஸ் நகரமொன்றில் இருக்கும் ஒரு நீரூற்றின் மர்மத்தை அறிவதற்காக அதில் இறங்கிய ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூவர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தொழில்நுட்பம் வளர்ந்தபின்னர், ஒருவர் நவீன உபகரணங்களுடன் நீரூற்றுக்குள் இறங்கியும், அதன் மர்மத்தை அறியமுடியாதால், மர்மம் இன்றும் தொடர்கிறது. பிரன்சின் சிறிய நகரமான Tonnarre இல் அமைந்துள்ளது Fosse Dionne என்னும் அந்த ஊற்று.

நாளொன்றிற்கு 311 லிற்றர் நீரை தோடர்ந்து வெளியேற்றி வரும் இந்த ஊற்று எங்கிருந்து உருவாகிறது என்பதை அறிவதற்காக 1974ஆம் ஆண்டு இரண்டு ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஊற்றுக்குள் இறங்கினர்.

ஆனால் அவர்கள் திரும்பவ வரவேயில்லை. 1996ஆம் ஆண்டு மீண்டும் ஒரு நீச்சல் வீரரை ஊற்றுக்குள் அனுப்பினர் அதிகாரிகள், அவரும் உயிருடன் திரும்பவில்லை.

பல ஆண்டுகள் கழித்து, தொழில்நுட்பத்தின் உதவியுடன், பக்காவாக திட்டமிட்டு, ஆக்சிஜன், நவீன கமெராவுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் ஒரு நீச்சல் வீரர் ஊற்றுக்குள் அனுப்பப்பட்டார்.

தான் செல்வதை வீடியோ எடுத்தவாறே, பூமிக்கடியில் 70 மீற்றர்கள் ஆழத்தில், 37 மீற்றர் தூரத்திற்கு நீந்திச்சென்றார் Pierre-Éric Deseigne என்ற அந்த வீரர். ஆனாலும் எங்கிருந்து அந்த ஊற்று உருவாகிறது என்பதை அவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. பிரெஞ்சு நீரூற்றின் மர்மம் இன்னமும் மர்மமாகவே நீடிக்கிறது.

வீடியோவைக் காண…
Previous Post Next Post