நவம்பரில் பாரிய ஆபத்தைச் சந்திக்கப் போகும் பிரான்ஸ்! அரச ஆலோசகர் எச்சரிக்கை!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

கொரோனாவின் இரண்டாவது அலையை எப்படி சமாளிக்க போகிறோம் என உலக நாடுகள் திணறி வரும் நிலையில் வுஹான் நகரம் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தும் அளவிற்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

குறிப்பாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிரான்சில் தற்போது மீண்டும் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகிறது.

பிரான்சில் தற்போது வரை 30,544 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர், 2,85,902 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 25,766 பேருக்கும் மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நவம்பரில் பிரான்சைத் தாக்கக்கூடும் என்று அரசாங்க ஆலோசகர் தெரிவித்தார்.

அதாவது, நவம்பரில் இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது என்று தொற்றுநோய் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞான சபைக்கு தலைமை தாங்கும் பேராசிரியர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி தெரிவித்தார்.

அதே சமயம் பிரான்சின் மார்சேய் நகரம் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது.

மது அருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் இயங்கும் நேரத்தை குறைத்துள்ளனர்.


இதேதேவளை பாரிஸ் நகரத்தினையும் அதன் புறநகரங்களையும் கொரோனா வைரஸ் தொற்றின் சிவப்பு மண்டலமாகத் தாங்கள் அறிவிப்பதாக, பெல்ஜியம் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

பிரித்தானியா, பிரான்சிலிருந்து வருபவர்களை 14 நாள் தனிமைப்படுத்துவதாக அறிவித்த நிலையில் பெல்ஜியம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

பெல்ஜியம் தங்கள் பங்கிற்கு, பிரான்சிலிருந்து, முக்கியமாக பாரிசிலிருந்து, தங்கள் நாட்டுக்கு திரும்புபவர்களுக்கும், பாரிசிலிருந்து பெல்ஜியம் செல்பவர்களுக்கும் கட்டாய கொரோனா வைரஸ் பரிசோதனையும், தனிமைப்படுத்தலும் செய்யப்பபோவதாகவும் அறிவித்துள்ளது.


பாரிஸ் நகரத்துடன், Seine-Saint-Denis, Val-de-Marne, Sarthe, Hérault, Alpes-Maritimes, Bouches-du-Rhône, Guyane française, Mayotte ஆகியவற்றில் இருந்து வருபவர்களிற்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் எனவும் பெல்ஜியம் பிரகடனப்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மிக அதிகளவான கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. உள்ளிருப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர் இதுவரை மிக அதிகூடிய தொற்று தற்போது பதிவாகியுள்ளது.

இதன்படி, (26/08/2020) கடந்த 24 மணிநேரத்தில் 5,429 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஏப்ரல் 14 ஆம் திகதியின் பின்னர் கிட்டத்தட்ட நான்கு மாதங்களின் பின்னர் இரண்டாம் கட்ட அலையாக இந்த தொற்று பதிவாகியுள்ளது.

குறிப்பாக பாரிஸ் உட்பட Île-de-Franceக்குள் இந்த தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாரிஸ் உட்பட Île-de-France மாகாணம் முழுவதையும் ஆபத்தான தொற்று வலையமாக ஜெர்மனி, பிரித்தானியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post