பிரான்ஸில் கொரோனாத் தொற்று! நான்கு நாட்களில் 22 பாடசாலைகள் மூடப்பட்டன!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 22 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போதே தேசிய கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer இதனை குறிப்பிட்டார். புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகின்றன. இந்நிலையில், பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 12 பாடசாலைகளும் Réunion தீவில் மீதமான பாடசாலைகளும் என மொத்தமாக 22 பாடசாலைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று மற்றும் பரவல் உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் பிரான்சில் உள்ள 60,000 பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடுகையில் இது ஒரு மிகச்சிறிய வீதம் ஆகும். அவசியம் கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Previous Post Next Post