பிரான்ஸில் அடுத்து வரும் நாட்களில் விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பாரிஸ் பிராந்தியத்துக்கான புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் இன்று(புதன்) அல்லது நாளை (வியாழன்) அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆட்கள் ஒன்று கூடுவதற்கான எண்ணிக்கையைப் பத்தாக வரையறுப்பது உட்பட பல புதிய நடைமுறைகளை சுகாதார அமைச்சர் வெளியிடுவார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாளாந்தம் பத்தாயிரத்துக்கும் அதிகம் என்ற எண்ணிக்கையில் புதிதாகத் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக பாதுகாப்புச் சபைக் கூட்டம் இன்று அல்லது நாளை கூட்டப்படும் என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதை தடுக்கும் முயற்சியாக திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்கு மண்டபங்களை (salle de fêtes) வாடகைக்கு வழங்குவதைத் தற்காலிகமாகத் தடை செய்வது உட்பட பல புதிய முன்மொழிவுகள் ஆலோசனைக்கு எடுக்கப்படவுள்ளன என்பதை ஊடகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

வாடகைக்குப் பெறும் மண்டபங்களில் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்று கூடி நடத்துகின்ற குடும்ப நிகழ்வுகளே பெருமளவிலான வைரஸ் தொற்றுக் களுக்கு வாய்ப்பாக அமைகின்றது என்பது சமீப நாட்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாரிஸ் பிராந்தியம் எங்கும் இரவு எட்டு மணிக்குப் பின்னர் மதுபான வகைகளை விற்பனை செய்வதை தடைசெய்யும் உத்தரவும் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை-

ஏனைய சில நகரங்களைப்போன்று இரவில் உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் திறந்திருக்கும் நேரத்தை வரையறுப்பது என்ற யோசனையை பாரிஸ் நகர மேயர் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது.
Previous Post Next Post