19 வயது இளைஞன் உட்பட மேலும் இரு கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு வாழைத்தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனும் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிபருமே உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை ஜா- எலயைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் மேலும் இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் 5 கோவிட் -19 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post